
புதுடெல்லி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொன்னத்தடியைச் சேர்ந்தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த அவர் 13,000 அடி உயரத்திலிருந்து ஸ்கைடைவிங் செய்தார். இந்தியாவிலிருந்து 70 வயது மூதாட்டி ஒருவர் இவ்வளவு உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்ப் நியூஸுக்கு லீலா ஜோஸ் அளித்த நேர் காணலில் கூறியதாவது: எனது மகன் அனீஸ் பி ஜோஸைப் பார்க்க கடந்த மாதம் துபாய்க்கு வருகை தந்தேன். அப்போது அவனிடம் ஸ்கைடைவிங் குறித்த ஆசையை வெளிப்படுத்தினேன். எனது நண்பர்களும் இந்த வயதில் இது முடியாத காரியம் என்று எனது கனவுக்கு தடை போட்டனர்.