
மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்டிஏ கூட்டணிக்கு அழைப்பு விடுப்பது குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதை வரவேற்கிறோம் என்று வைகை செல்வன் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. தேர்தல் கூட்டணி குறித்து சி.வி.சண்முகம் பேசுகிறார்.
கூட்டணி சேர வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் யார் நின்றார்கள்? தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியதில்லை. திமுகதான் எதிரி என்று விஜய் கூறுவதற்கு திமுகதான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் அவருடன் சேருவது பற்றிய தகவல்கள் வதந்தியாகும். விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. இதை மறுக்க முடியாது. ஆனால், அது வாக்காக மாறுமா? என்பதை தேர்தல் முடிவு வெளியான பிறகே கூற முடியும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.