
மாதவிடாய் நாள்களின் அவதிகள் அதிகரிக்க, அந்த நாள்களில் உண்ணும் சில உணவுகளும் காரணமாகலாம்.
வலியிலிருந்து விடுபட, தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ.
உடலில் வாயு உற்பத்தியை அதிகரிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, மன அழுத்தம் அதிகரிக்கலாம். அடிவயிற்றில் வலியை ஏற்படுத்துவதுடன், வயிற்றுப்போக்கையும் உண்டாக்கலாம்.
உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள். உடலில் வாயு உற்பத்தியை அதிகரிப்பதுடன், மாதவிடாய்க்கால வலியையும் தீவிரமாக்கும்.

வறுத்த, அதிக மசாலா சேர்த்த உணவுகள் அழற்சிப் பிரச்னையை அதிகப்படுத்தும். மாதவிடாய்க்கால வலியைத் தீவிரமாக்கும்.
உடலில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால், மனநலனில் மாற்றங்கள் ஏற்படும். பதற்றம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி சமச்சீரற்று இருக்கும்.

இதிலுள்ள கஃபைன், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத்துடிப்பின் இயல்பு மாறலாம். பதற்றமும் அடிவயிற்றுப் பகுதியில் வலியும் அதிகரிக்கும்.
இவற்றின் கார்பனேட்டட் தன்மை, வாயு உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் மாதவிடாய்க்கால வலி அதிகமாகும்.

உப்பு, மசாலா, எண்ணெய்க் குறைவான உணவுப்பொருள்களை சாப்பிட்டால், மாதவிடாய் வலி வராது.