
புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகையமுன்னிட்டு அக்டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தீபாவளி மற்றும் சாத் பண்டிகை காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சுமார் 12,000 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்க உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயணம் செய்யலாம். இது, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.