• September 24, 2025
  • NewsEditor
  • 0

மத்திய அரசின் ஜி.எஸ்.டி 2.0 வரி சீர்த்திருத்தத்துக்குப் பிறகு வாகனங்களின் விலை பெருமளவில் சரிந்துள்ளது. 350 சிசிக்கு குறைவான பைக்குகளுக்கான வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Royal Enfield பைக்குகள் விலைக் குறைப்பு

இதன் விளைவாக இந்தியாவில் பெரிதும் விரும்பப்படும் ராயல் என்ஃபில்ட் நிறுவன இருசக்கர வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20,000 வரைக் குறைந்திருக்கிறது.

ஹன்ட்டர், புல்லட், கிளாசிக், மீட்டியார், கோன் கிளாசிக் உள்ளிட்ட பைக்குகளின் விலை குறைந்துள்ளது.

Royal Enfield Hunter

Hunter 350

ராயல் என்ஃபில்ட் பிராண்டின் ஆரம்பநிலை வாகனமாக ஹன்ட்டர் ஃபேக்டரி வேரியன்ட் விலை தற்போது 1,37,640. முந்தைய விலை 1,49,900. ரூ.12,260 குறைந்திருக்கிறது.

இதேப்போல டேப்பர் & ரியோ வேரியன்ட்கள் 1,76,750 ரூபாயிலிருந்து 1,62,292 ஆக, 14,458 ரூபாய் குறைந்துள்ளது.

ரெபல், லண்டன், டோக்கியோ வேரியன்ட்கள் 1,81,750 ரூபாயிலிருந்து 1,66,883 ஆக, 14,867 ரூபாய் குறைந்துள்ளது.

Bullet

புல்லட்டில் பட்டாலியன், மிலிட்டரி, ஸ்டாண்டர்ட், பிளாக் கோல்ட் என நான்கு வேரியன்ட்கள் உள்ளன.

பட்டாலியன் 14,464 ரூபாய் குறைந்து 1,62,161 ரூபாய்க்கும், மிலிட்டரி ரூ.14,521 குறைந்து, 1,62,795 ரூபாய்க்கும், ஸ்டாண்டர்ட் ரூ.16,520 குறைந்து 1,85,187 ரூபாய்க்கும், பிளாக் கோல்ட் ரூ.18,057 குறைந்து 2,02,409 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Royal Enfield Classic

Classic

கிளாசிக் மாடலிலும் எக்கச்சக்க வேரியன்ட்கள் உள்ளன. ரெட்டிட்ச் எஸ்சி, ஹல்சியான் எஸ்சி, மதராஸ் ரெட், ஜோத்பூர் ப்ளூ ஆகிய வேரியண்ட்கள் சுமார் ரூ.16,000 – 16,700 வரைக் குறைந்து 1,81,000 முதல் 1,87,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

ரூ.2,08,415 ரூபாய்க்கு விற்கப்பட்ட மெடாலியன் பிரான்ஸ் வேரியன்ட், 17,049 ரூபாய் குறைந்து 1,921,366 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.2,20,000 முதல் 2,35,000 வரை விற்கப்பட்டு வந்த காமாண்டோ ஸ்டாண்ட், கன் கிரே, ஸ்டெல்த் பிளாக், எமரல்ட் கிரீன் வேரியன்ட்கள் 18,000 – 19,000 குறைந்து 2,02,000 முதல் 2,15,000 வரை விற்பனைக்கு வந்துள்ளது.

Meteor

மீட்டியார் ஃபயர்பால் வேரியன்ட் 2,08,270 ரூபாயிலிருந்து 17,037 ரூபாய் குறைந்து ரூ.1,91,233க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டெல்லர் வேரியன்ட் 2,18,385 ரூபாயிலிருந்து 17,865 ரூபாய் குறைந்து ரூ.2,00,520க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அரோரா வேரியன்ட் முந்தைய விலையிலிருந்து ரூ.18,196 குறைந்து 2,04,234 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூப்பர் நோவா முந்தைய விலையிலிருந்து ரூ.19,024 குறைந்து 2,13,521 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Royal Enfield Meteor

Goan Classic

கோவன் கிளாசிக்கில் பர்பிள் கேஸ், ஷேக் பிளாக், ரேவ் ரெட், ட்ரிப் டீல் என நான்கு வேரியன்ட்கள் உள்ளன. இவை 19,400 – 19,665 ரூபாய் குறைந்து 2,18,000 முதல் 2,21,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

350 சிசிக்கும் அதிகமான சக்தி கொண்ட பைக்குகளுக்கு வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் ஸ்க்ராம், கொரில்லா, ஹிமாலயன், இண்டெர்செப்டார், காண்டினண்டல் ஜி.டி, கிளாசிக் 650, ஷாட்கன் 650, பியர் 650 மற்றும் சூப்பர் மீட்டியார் ஆகிய மாடல்களின் விலை அதிகரித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *