• September 24, 2025
  • NewsEditor
  • 0

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐ.நா பொது சபையில் உரையாற்றினார்.

அப்போது தான் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க நலனுக்கு என்னென்ன செய்துள்ளார்? என்பதை விளக்கியிருந்தார் ட்ரம்ப். அவை;

அமெரிக்காவின் பொருளாதாரம்

“என்னுடைய வெறும் 8 மாதக்கால ஆட்சியில், தற்போது உலகத்திலேயே அமெரிக்கா ‘ஹாட்டஸ்ட் நாடாக’ உள்ளது.

அமெரிக்காவில் இப்போது எரிசக்தியின் விலை, பெட்ரோல், மளிகைப்பொருள்கள், அடமான வட்டி ஆகியவை குறைந்துள்ளன, பணவீக்கம் சரிந்துள்ளது.

ட்ரம்ப் | ஐ.நா சபை

இந்தக் குறுகிய காலத்தில், பங்குச்சந்தை 48 முறை உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவில் ஊதியங்கள் உயர்ந்து வருகின்றன.

நான்கு ஆண்டுகளில், முன்னாள் அதிபர் பைடன் அமெரிக்காவிற்கு 1 டிரில்லியன் டாலருக்கும் குறைவான முதலீடுகளைத் தான் கொண்டு வந்தார்.

ஆனால், என்னுடைய 8 மாத ஆட்சிக்காலத்தில் 17 டிரில்லியன் டாலர் புதிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளேன். அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வரி ரத்துகளைக் கொண்டு வந்துள்ளேன்.

எல்லை பாதுகாப்பு

கடந்த நான்கு மாதங்களாக, அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்கள் நிகழ்வது ஜீரோ ஆகியுள்ளது.

இனி யாராவது அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறினால், ஒன்று சிறைக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது திரும்ப அவர்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள்.

ட்ரம்ப் | ஐ.நா சபை
ட்ரம்ப் | ஐ.நா சபை

பொது அமைதி

தற்போது நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் குற்றங்கள் குறைந்துள்ளன.

அமெரிக்காவில் இருந்து 1,700 தொழில்முறை குற்றவாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும், கிரிமினல் கும்பல்களையும் ‘தீவிரவாத அமைப்பாக’ அறிவித்திருக்கிறோம்.

அமெரிக்கா

அடுத்த ஆண்டு, அமெரிக்கா 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. அடுத்தடுத்து FIFA உலகக் கோப்பை, 2026-ஐயும், ஒலிம்பிக்ஸ், 2028-ஐயும் அமெரிக்கா நடத்த உள்ளது,” என்று ட்ரம்ப் தனது உரையில் தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *