• September 24, 2025
  • NewsEditor
  • 0

கைவிடப்பட்ட பாகிஸ்தானிய பெண் குழந்தையை, சீன தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இன்று அந்த பெண் சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு நட்சத்திரமாக ஜொலிப்பதோடு, தனது ஆரம்பகால ரசிகர் ஒருவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சவுத் மார்னிங் போஸ்ட்படி, ஃபேன் சிஹே என்ற அந்தப் பெண் பாகிஸ்தானில் பிறந்தவர். கைக்குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்ட அவரை, அங்கு பணிபுரிந்தபோது சீனத் தம்பதியினர் தத்தெடுத்தனர், பின்னர் அவர்கள் சீனாவிற்கு திரும்பி ஹெனான் மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு சிஹே, நூடுல்ஸ் சாப்பிட்ட வீடியோ ஒன்று எதிர்பாராதவிதமாக வைரலாகி, ஒரே இரவில் சமூக ஊடக நட்சத்திரமானார்.

அவரது எளிமையான கிராமத்து வாழ்க்கை முறை மற்றும் விவசாயப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்களுக்கு 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் ரசிகர்களாகினர்.

ஆரம்பகால ரசிகர் ஒருவர், சிஹே மீது அதிக அக்கறை காட்டியுள்ளார். இவரும் சந்தித்து பேசியிருக்கிறார். நாளடைவில் அது காதலாக மாறியது. ஃபேனின் சமூக ஊடக வளர்ச்சிக்கு முழுமையாக ஆதரவளிக்க விரும்பிய அந்த ரசிகர், தனது வேலையை விட்டுவிட்டு வீடியோ எடுப்பது, எடிட் செய்வது மற்றும் ஃபேனின் வளர்ப்பு பெற்றோருக்கு விவசாயப் பணிகளில் உதவுவது என முழுநேரமும் அவருடனேயே இருக்கத் தொடங்கினார்.

மூன்று வருட காதலுக்குப் பிறகு, இந்த ஜோடி செப்டம்பர் 17 அன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இரு குடும்பத்தாரின் ஆசீர்வாதங்களுடன் மிகவும் எளிமையாகவும், பாரம்பரிய முறையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *