
‘மனதை திருடி விட்டாய்’ படத்தின் இயக்குநர் நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 59.
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் மிகவும் பிரபலமான படம் ‘மனதை திருடி விட்டாய்’. இப்படத்தின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நாராயணமூர்த்தி. இவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 59.