• September 24, 2025
  • NewsEditor
  • 0

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வரும் போரில், 65000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

அதனால் உலக நாடுகள் இஸ்ரேல் மீது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில், உலகின் அதிகாரப்பூர்வமான 195 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருக்கின்றன.

இது வெளிப்படையாகவே உலக நாடுகளின் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதிபர் ட்ரம்ப் – நெதன்யாகு

ஐ.நா-வில் ட்ரம்ப் பேச்சு

இந்த நிலையில், நேற்று ஐ.நா சபையில் பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன்.

இதை இதுவரை எந்த அதிபரும், எந்தப் பிரதமரும், எந்த நாடும் செய்ததில்லை. இவை அனைத்தையும் நான் வெறும் 7 மாதங்களில் செய்திருக்கிறேன்.

இதுவரை இப்படி நடந்ததில்லை. இதைச் செய்ததில் நான் பெருமை கொள்கிறேன். போர்களை நிறுத்தியதற்கும், ஆபிரகாம் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்கும் எங்கள் நாட்டிற்கு கிரெடிட் கிடைத்திருக்க வேண்டும்.

அது கிடைக்கவில்லை. இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள்.” எனப் பேசியவர், தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு எதிராகப் பேசினார்.

மாக்ரோன் பதில்:

இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உரையாற்றினார்.

அவரின் உரையில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உண்மையிலேயே நோபல் பரிசை விரும்பினால், காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒரு தீர்வை நோக்கிப் பாடுபட வேண்டும்.

இம்மானுவேல் மக்ரோன்
இம்மானுவேல் மக்ரோன்

இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பிற்கு அதிகாரம் இருக்கிறது. காசாவில் போரை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை.

எனவே, ட்ரம்பால் எங்களை விட அதிகமாகச் செய்ய முடியும். ஐ.நா மன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்றும்போதுகூட,

‘எனக்கு அமைதி வேண்டும். நான் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டேன். அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்’ என உரையாற்றினார்.

இஸ்ரேல் – காசா போரையும் நிறுத்தினால்தான், அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு சாத்தியமாகும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *