
சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருதுப் பட்டயம் வழங்கப்படும்.