• September 24, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடிசா சட்​டப்​பேர​வை​யில் பிஜு ஜனதா தளம் எம்​எல்​ஏ​வின் கேள்விக்கு மாநில தொழிலா​ளர் நல அமைச்​சர் கணேஷ் ராம் சிங்​குந்​தியா அளித்த பதில் வரு​மாறு: சென்ற ஆகஸ்ட் மாதம் வரையி​லான கடந்த 5 ஆண்​டு​களில் ஒடி​சாவை சேர்ந்த 289 தொழிலா​ளர்​கள் பிற மாநிலங்​களில் பணி​யாற்​றும்​போது உயி​ரிழந்​தனர். இதே கால​கட்​டத்​தில், பிற மாநிலங்​களில் இருந்து ஒடிசா தொழிலா​ளர்​கள் 5,612 பேரை அரசு மீட்​டுள்​ளது.

2024-ம் ஆண்​டில் ஒடி​சா​வில் இருந்து 70,142 தொழிலா​ளர்​களை பணி​யமர்த்​து​வதற்​காக 1,037 ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு ஒடிசா அரசு உரிமம் வழங்​கியது. 1979-ம் ஆண்டு மாநிலங்​களுக்கு இடையி​லான புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் சட்​டத்​தின் கீழ் இந்த உரிமங்​கள் வழங்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *