
சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ரூ.40 கோடி கையாடல் செய்து அனுப்ப திட்டமிட்ட விவகாரத்தில் புழல் சிறையில் உள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் இலங்கையைச் சேர்ந்த தமிழரான லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா (45) அடைக்கப்பட்டுள்ளார். போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி, சென்னை விமான நிலையத்திலிருந்து, பெங்களூரு செல்ல முயன்றபோது 2021-ம் ஆண்டில் தமிழக கியூ பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.