• September 24, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்​கத்​தா​வில் திங்​கள்​கிழமை இரவு முழு​வதும் கனமழை கொட்​டி தீர்த்தது. இதில் மின்​சா​ரம் தாக்கி மூவர் உட்பட மொத்​தம் 8 பேர் உயிரிழந்தனர். கொல்​கத்​தா​வில் நேற்​று​முன்​தினம் இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. இதன் காரண​மாக, நகரின் பல இடங்​களில் தண்​ணீர் தேங்​கியது. தாழ்​வான பகு​தி​களில் உள்ள வீடு​களுக்​குள் வெள்​ளம் புகுந்​த​தால் மக்​களின் அன்​றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டது.

பெனி​யாபு​குர், காலிகபூர், நேதாஜி நகர், காரியஹட், ஏக்​பல்​பூர், பெஹலா மற்​றும் ஹரிதேவ்​பூர் நகரில் நிகழ்ந்த பல்​வேறு சம்​பவங்​களில் மொத்​தம் 8 பேர் உயி​ரிழந்​தனர். இதில் மின்​சார கசி​வின் காரண​மாக உயி​ரிழந்த 3 பேரும் அடக்​கம். சாலைகள், ரயில் பாதைகளில் தண்​ணீர் தேங்​கிய​தால் பேருந்து போக்​கு​வரத்​து, புறநகர் ரயில் சேவை, மெட்​ரோ சேவை​கள் முடங்​கின. தண்​ணீர் வீடு​களுக்​குள் புகுந்​த​தால் மக்​களின் உடமை​களுக்கு பெருத்த சேதம் ஏற்​பட்​டது. கனமழை தொடரும் என்ற அறி​விப்​பின் காரண​மாக பள்​ளி​களுக்கு நேற்று விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *