
பிரபல அசாம் பாடகர் ஜூபின் கார்க் (52). இவர் அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர், சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த‘வடகிழக்கு விழா’வுக்கு சென்றிருந்தார். அப்போது ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட போது, செப்.19-ல்உயிரிழந்தார்.
அவர் உடல் அசாம் தலைநகர் குவாஹாட்டி போஹேஸ்வர் விளையாட்டுத் திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மத்தியஅமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கமர்குச்சி கிராமத்தில், கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது அந்த இடத்தில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது.