• September 24, 2025
  • NewsEditor
  • 0

ருத்ரபூர்: ரஷ்​யா​வில் படிக்​கச் சென்ற உத்​த​ராகண்ட் மாநில இளைஞர் ஒரு​வரை, ரஷ்ய ராணுவத்​தில் சேர்த்து போர் முனைக்கு அனுப்​பிய சம்​பவம் நடந்​துள்​ளது. உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபூர் பகு​தி​யிலுள்ள குஷ்மோத் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ராகேஷ் குமார் (30). இவர் அண்​மை​யில் ரஷ்​யா​விலுள்ள செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் பல்​கலைக்​கழகத்​தில் இணைந்து உயர்​கல்வி பயில்​வதற்​காகச் சென்​றார்.

ஆனால் அவரை ரஷ்ய ராணுவத்​தினர் சிறைபிடித்து பயிற்சி அளித்து உக்​ரைனுக்கு எதி​ராக போரிட போர்​முனைக்கு அனுப்​பி​யுள்​ளனர். இதுதொடர்​பாக தனது குடும்​பத்​தா​ருக்கு தகவல் தெரி​வித்​துள்ள ராகேஷ் குமார், தன்னை மீட்க உதவு​மாறு கோரி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *