
சென்னை: அதிமுக எத்தனை கோஷ்டிகளாக இருந்தாலும், அனைத்தையும் பாஜகதான் வழிநடத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் ஒவ்வொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வை சந்தித்து வருகின்றனர். பாஜகதான் அதிமுகவை வழி நடத்துக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.