• September 24, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் தலை​வரும் ஹைத​ரா​பாத் எம்​.பி.​யு​மான அசாதுதீன் ஒவைசி பிஹாரில் இண்​டியா கூட்​ட​ணி​யில் இணைந்து போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்​தார். இது தொடர்​பாக ஆர்​ஜேடி கட்​சிக்கு 3 முறை கடிதம் எழு​தி​ய​போ​தி​லும் அவர்​களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறி​னார்.

இது தொடர்​பாக அவர் அண்​மையில் கூறுகை​யில், எங்​களுக்கு 6 இடங்​கள் போதும். அமைச்​சர் பதவி தேவை​யில்லை என்​றோம். இதற்கு மேல் நாங்​கள் என்ன செய்ய முடி​யும்?” என்​றார். இந்​நிலை​யில் பிஹாரில் ‘சீ​மாஞ்​சல் நியாய யாத்​திரை' என்ற பெயரில் 3 நாள் பிரச்​சா​ரத்தை ஒவைசி நேற்று தொடங்​கி​னார். இதன் மூலம் பிஹாரில் அவர் தனித்து போட்​டி​யிடு​வார் என்று தெரி​கிறது. பிஹாரில் கடந்த 2020 தேர்​தலில் ஒவைசி 25 இடங்​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில் வென்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *