• September 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்,ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாஸே (12த் ஃபெயில்) ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *