
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நடப்பாண்டு ஜூலை மாதத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 21.04 லட்சம் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடும்போது, நிகர சம்பளப் பட்டியல் உறுப்பினர்கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது.