• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னையில் பஸ், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் டிக்கெட் எடுக்கவும், கேப், ஆட்டோ புக் செய்யவும் ஆல்-இன்-ஒன் ஆப்பாக ‘சென்னை ஒன்’ செயலியை (APP) தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் நீண்ட வரிசையில் நிற்காமல் நேரத்தை சேமிக்கலாம்.

இந்த ஆப்பை தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்த ‘சென்னை ஒன்’ ஆப்

ப்ளே ஸ்டோரில் இருந்து ‘சென்னை ஒன்’ செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

ஆப்பை டவுன்லோடு செய்ததும், அந்த ஆப்பிற்குள் சென்று, உங்களது மொபைல் எண்ணை பதிவிட்டு, ‘Continue’ கொடுக்கவும்.

பின், வரும் OTP-ஐ உள்ளிட்டால், உங்களது தனிநபர் தகவல்கள் கேட்கப்படும். அதை பக்காவாக ஃபில் செய்துகொள்ளவும்.

இனி இந்த ஆப்பில் உங்களுடைய புரோஃபைல் ரெடி.

என்னென்ன ஆப்ஷன்கள் உண்டு?

ஆப்பிற்குள் சென்று, ‘Profile’-ஐ கிளிக் செய்தால்,

முதலில் ‘Favourites’ என்கிற ஆப்ஷன் உண்டு. அதில் உங்களுடைய வீடு, ஆபீஸ் முகவரியைப் பதிந்துகொள்ளலாம்.

அப்படி செய்தால், நீங்கள் இந்த ஆப்பைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் இந்த முகவரிகளை டைப் செய்து போட வேண்டியிருக்காது, கிளிக் செய்தால் போதும்.

‘Transit Preference’-ல் நீங்கள் பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்கள் – எது உங்களுக்கு ஏற்ற சாய்ஸோ, அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இந்தத் தேர்விற்கு ஏற்ற மாதிரி, நீங்கள் டிக்கெட் தேடும்போது உங்களுக்கு ஆப்ஷன்களைக் காட்டும்.

சென்னை ஒன்று: Chennai One
சென்னை ஒன்று: Chennai One

‘Safety’ என்கிற ஆப்ஷனில், ‘Trusted Contacts’ என்ற ஒன்று உண்டு. இதில் நீங்கள் உங்களுக்கு நம்பகமான ஒருவரின் கான்டக்ட் நம்பரை இணைத்துகொள்ளுங்கள். நீங்கள் இந்த ஆப் மூலம் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும், அது குறித்த தகவல்கள் அந்த நபருக்கு சென்றுவிடும்.

‘Safety Check ins’-ஐ ‘Enable’ செய்வதன் மூலம், நீங்கள் பயணிக்க வேண்டிய வழியில் இருந்து வழி மாறினால், உங்களுக்கு உடனே அலர்ட் கொடுக்கப்படும்.

‘Emergeny Action’-ஐ ‘Activate’ செய்து வைத்தால், எமர்ஜென்சியின் போது, இந்த ஆப்பிற்குள் இருக்கும்போது, உங்களது மொபைலை ஷேக் செய்தாலே, உங்களுடைய நம்பகமான காண்டாக்ட், 24/7 சேஃப்டி டீம் மற்றும் இடங்களுக்கு ஆட்டோமேட்டிக் கால் சென்றுவிடும்.

Guide

‘Home’ பேஜிலேயே ‘Search’ பட்டனைக் கிளிக் செய்து, ‘நீங்கள் புறப்படும் இடம்’, ‘நீங்கள் போக வேண்டிய இடத்தை’ பதிவு செய்தால், நீங்கள் எப்படி செல்ல வேண்டும், எங்கே சென்று பஸ் ஏற வேண்டும், எப்படி மாற வேண்டும் என்கிற வழிகாட்டுதலை சூப்பராக காட்டிவிடும்.

அதை வைத்து நீங்கள் டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம்.

அப்படி பெறும் டிக்கெட்டை நீங்கள் பயணத்தின் போது காட்டலாம்.

இதுப்போக, உங்களுக்கு அருகில் என்னென்ன டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கிறது என்பது ஹோம் பேஜிலேயே காட்டப்படுகிறது.

சென்னை ஒன்று: Chennai One
சென்னை ஒன்று: Chennai One

டிக்கெட் புக் செய்வது எப்படி?

Services-ஐ கிளிக் செய்து பஸ், மெட்ரோ, புறநகர் ரயில் எதில் பயணிக்க வேண்டுமோ, அதை தேர்ந்தெடுங்கள்.

பின், நீங்கள் புறப்படும் இடம், போக வேண்டிய இடத்தை பதிவிடுங்கள்.

நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு செல்ல என்னென்ன பஸ், ரயில், மெட்ரோ உண்டு என்பதை காட்டும்.

அதை தேர்ந்தெடுத்து புக் செய்துகொள்ள வேண்டியது தான்.

ஓகே மக்களே, இனி இந்த ஆப்பை பயன்படுத்தி பயணத்தை ஈசி ஆக்குங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *