
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் `ஹனுமான்’ திரைப்படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புராணங்களை அடிப்படையாக வைத்து ஒரு சூப்பர் யுனிவர்ஸை கட்டமைத்திட முடிவு செய்தார் பிரசாந்த் வர்மா.
இந்த யுனிவர்ஸின் அடுத்தடுத்த திரைப்படங்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டன.
பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து ஆதிரா’, ஜெய் ஹனுமான்’, பாலைய்யாவின் மகன் நடிக்கும் படம் என அடுத்தடுத்து லைன் அப்களும் வைத்திருக்கிறார்கள்.
இவற்றில் `ஆதிரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
அந்த போஸ்டரும் இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் கவனம் ஈர்த்திருக்கிறது. தயாரிப்பாளர் கல்யாணி தாசரி அறிமுக நடிகராக படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதனைத் தாண்டி வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கிறார். புராணங்களை மையப்படுத்திய இந்த யுனிவர்ஸ் படைப்பில் எஸ்.ஜே. சூர்யா அசுரனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது.

`ஹனுமான்’ வெற்றிக்குப் பிறகு மிகவும் பிஸியான இயக்குநராக சுற்றி வருகிறார் பிரசாந்த் வர்மா.
இந்தப் படத்தையும் முதலில் பிரசாந்த் வர்மாதான் இயக்கவிருந்தார்.
அவருடைய மற்ற பட கமிட்மென்ட் காரணங்களால் இப்படத்தை இயக்குநர் ஷரண் கோப்பிஷெட்டி இயக்கியிருக்கிறார்.