
திருமணம் மீறிய உறவிற்காக பெண் தொழிலதிபர் ஒருவர் 2.1 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஆனால் அந்த உறவு ஓராண்டிலே முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சோங்கிங்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே திருமணம் ஆன பெண் தொழிலதிபர் ஒருவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியருடன் நெருங்கி பழகி இருவரும் காதல் வயபட்டுள்ளனர். அந்த ஊழியரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது துணைகளை விவாகரத்து செய்துவிட்டு இவர்கள் இருவரும் இணைந்து வாழ முடிவு செய்திருக்கின்றனர்.
விவாகரத்து பெறும்போது அந்த ஊழியரின் மனைவி, குழந்தைகளின் செலவிற்காக இழப்பீடு கேட்டிருக்கிறார். பெண் தொழிலதிபர் அந்த ஊழியருக்கு 2.1 கோடி பணமும் கொடுத்து உதவி இருக்கிறார்.
இருவரும் திட்டமிட்டபடி தங்களது உறவிலிருந்து வெளியே வந்தனர். அதன் பின்னர் ஓராண்டு காலம் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின்னர் அந்த உறவும் பிரிந்திருக்கிறது.
இதற்கிடையில் தான் கொடுத்த 2.1 கோடி ரூபாயை திருப்பித் தருமாறு பெண் தொழிலதிபர் அந்த ஊழியர் மற்றும் மனைவியிடம் கோரி இருக்கிறார்.
பணத்தை திருப்பி தர மறுத்ததால் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ”இந்த பணம் குழந்தையின் வளர்ப்புக்காகவும் விவாகரத்து இழப்பீடாகவும் கணவரால் மனைவிக்கு வழங்கப்பட்டதால் இதை திருப்பித் தர தேவையில்லை” என்று தீர்ப்பளித்து இருக்கிறது.