
2026ல்- விஜய் புதிதாக களமிறங்குவதால் அரசியல் சூழல் முன்பைப் போல் இல்லாமல் மாறியுள்ளது. விஜய் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துவார் என்று எழும் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை கூறுகின்றனர். அதிமுகவினரும் அதிமுகவினரும், விஜய்க்கு கூடும் கூடும் கூட்டம் ஓட்டாக மாறது என்று சொல்கின்றனர. இந்தச் சூழலில் விஜய்க்கு கூடும் கூட்டத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்கிறார் காங்கிரஸின் டேட்டா பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி. அதுமட்டுல்லாது, காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு என்று முன்வைக்கும் கருத்துகள் குறித்தும் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்னை, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விகடனுக்கு அளித்த இந்த பிரத்யேக நேர்காணலில் பதிலளிக்கிறார்.