
சென்னை அடையாறில் அமைந்துள்ள தியோசாபிகல் சொசைட்டி தனது 150வது ஆண்டுக்கால சேவையை நிறைவு செய்திருக்கிறது.
சென்னை சலசலப்பில் இருந்து சற்றே தனித்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு அடர்ந்த மரங்கள், விலங்கு மீட்பு மையம், ஒரு இந்து கோவில், ஒரு மசூதி, ஒரு புத்த ஆலயம், ஒரு தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன.
அதை தவிர விலங்குகள் சுதந்திரமாக இங்கு நடமாடுகின்றன, போட்டி தேர்வுகள் இல்லாமல் ஏழாம் வகுப்பு வரை இயங்கும் ஒரு பள்ளி இருக்கிறது, இயற்கையை படிக்கும் இடம் இருக்கிறது, பெரும்பாலான ஆன்மிக கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் ஒரு நூலகம் இருக்கிறது.
சென்னையில் தனித்துவம் பெற்று இருக்கும் இந்த இடத்திற்கு ஒரு தனித்துவமான வரவேற்பு இருந்து வந்தது. இது தனது 150-வது வருடத்தை எட்டிய நிலையில் அமைதியான முறையில் ஆரவாரம் இன்றி அதனை கொண்டாடியிருக்கிறது.
தியோசாபிகல் சொசைட்டி, 1875 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஹெலினா பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி ஓல்காட் ஆகியோரால் நிறுவப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் சென்னையில் நிறுவப்பட்டு இருக்கிறது. மதம், தத்துவம், அறிவியல் படிப்பை ஊக்குவிப்பதை நோக்கமாக இது கொண்டிருக்கிறது.
தியோசாபிகல் சொசைட்டி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அர்த்தம் ”கடவுளின் ஞானம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த இடம் பொது மக்களுக்காக முன்பு திறக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால் அங்கு குப்பையை கொட்டுதல், 200 ஆண்டு கால பழமையான மரங்களில் பெயர்களை செதுக்குதல் போன்ற செயல்களால் அங்கு நுழைவு தடை செய்யப்பட்டு இருப்பதாக அதன் நிறுவனர் கூறியிருக்கிறார்.