• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் அவர்கள் கூறியுள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘ ஜிஎஸ்டி வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் அவர்கள் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்?. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *