
இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,500-உம், பவுனுக்கு ரூ.84,000-உம் விற்பனை ஆனது.
இப்போது இன்று மதியம் 3 மணி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.140-உம், பவுனுக்கு ரூ.1,120-உம் உயர்ந்துள்ளது.
ஆக, இப்போது தங்கம் கிராமுக்கு ரூ.10,640-க்கும், பவுனுக்கு ரூ.85,120-க்கும் விற்பனையாகிறது.

இன்று மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.210-உம், பவுனுக்கு ரூ.1,680-உம் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் தினம் தினம் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அதனால்தான், இந்த விலை உயர்வு.
நேற்று காலை பவுனுக்கு ரூ.82,880-க்கு விற்பனையாகி கொண்டிருந்த தங்கம், இப்போது ரூ.85,120-க்கு விற்பனை ஆகிறது.
ஆக, இந்த இரண்டு நாள்களிலேயே பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருக்கிறது.

தற்போது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.150-க்கு விற்பனை ஆகி வருகிறது.