
சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை கள் ராதிகா சரத்குமார், நிரோஷா ராம்கி ஆகியோரின் தாயாருமான கீதா ராதா (86), வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.