
சென்னை: பருவமழைக்கு முன்பாக மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப் படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் கட்டிடங்களின் அதிகரிப்பாலும்,நெருக்கடியாளும் போதுமான வடிகால் வசதிகள் முறையாக இல்லாததாலும், நெகிழி குப்பைகளின் பயன்பாட்டினாலும் கனிசமான மழைக்கே தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளிக்கின்ற அபாயகரமான சூழல் முன்பு எல்லாம் நிலவியது.