
சென்னை: தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமாரின் மாமியாரும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் மறைவையடுத்து சென்னையில் உள்ள அவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘டிடிவி தினகரன் 2024 முதல் எங்கள் கூட்டணியில் இருந்தார். அவர் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அவர் ஒரு மாத காலம் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், இப்போது சென்னை வந்ததும் அவரை நேரில் சந்தித்தேன்.