• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பழங்​குடி​யின மக்​களின் மொழிகளை பாது​காக்க ரூ.3 கோடி​யில் ஒலி, ஒளி ஆவணங்​களாக பதிவு செய்​யப்​பட்டு வரு​வ​தாக துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​துள்​ளார். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை சார்​பில், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின இளைஞர்​களுக்​கான 3 நாள் ஆதி கலைக்​கோல் பயிற்சி பட்​டறை சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் நேற்று தொடங்​கியது. இதனை துணை முதல்​வர் உதயநிதி தொடங்கி வைத்​து, கண்​காட்​சி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த அரசு சமூக நீதி கல்​லூரி விடுதி மாணவர்​களின் ஓவி​யம் மற்​றும் சிற்​பக்​கலை படைப்​பு​களை​யும், பாரம்​பரியமிக்க இசைக்​கருவி​களை​யும் பார்​வை​யிட்​டார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: கலை என்​பது மக்​களு​டைய வாழ்க்​கை​யில் ஒரு முக்​கிய​மான அங்​க​மாகும். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மக்​களு​டைய கலை வடிவங்​களை இளம்​தலை​முறை​யினர் தெரிந்து கொள்ள வேண்​டும். ஆதி​தி​ரா​விட மக்​களு​டைய நாட்​டுப்​புற பாடல்​கள் எல்​லாம், ஒடுக்​கப்​பட்ட மக்​களு​டைய விடு​தலைக்​கான குரல்​களாக இருந்​திருக்​கின்​றன. நாட்​டுப்​புறப் பாடல்​களை கேட்​டோம் என்​றால், சமூகக் கொடுமை​கள், இயற்கை சீற்​றங்​களில் இருந்து மக்​களைக் காப்​பாற்​றிய ஹீரோக்​களை அறிந்து கொள்​ளலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *