
சென்னை: தமிழகத்தில் 33/11 கி.வோ திறனில் 70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சீராக மின் விநியோகத்தை உறுதிசெய்ய மின்வாரியம் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.1,500 கோடியில்,133 புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள துணை மின்நிலையங்களில், 52 பவர் டிரான்ஸ்ஃபார்மர்களைப் பொருத்த திட்டமிடப்பட்டது.