
கவுஹாத்தி: மறைந்த பாடகர் ஜுபின் கார்க் இறுதி சடங்கு நாளை அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது. அவரது நினைவாக இரண்டு இடங்களில் அசாம் அரசு நினைவிடம் அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவுஹாத்தி நகரில் உள்ள அர்ஜுன் போகேஸ்வர் பருவா விளையாட்டு மைய கட்டிட வளாகத்தில் அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடல் செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் இறுதி சடங்குக்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.