
புதுடெல்லி: அவதூறு குற்றமற்றது என்று அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றவியல் அவதூறு சட்டத்தின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தனிநபர்களும், அரசியல் கட்சிகளும் குற்றவியல் அவதூறு சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதைப் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இன்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இன்று நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், "இவை அனைத்தையும் குற்றமற்றதாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்…" என்று குறிப்பிட்டார்.