• September 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குறுகிய அரசி​யல் பார்​வை​யுடன் மும்​மொழிக் கொள்​கையை பிரச்​னை​யாக்​கு​வ​தாக மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறி​னார். சென்னை ஐஐடி​யில் நடை​பெற்ற ‘தக் ஷின பதா’ மாநாட்​டில் கலந்​து​கொண்ட தர்​மேந்​திர பிர​தான், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: கல்வி நிதி விவ​காரம் குறித்து 2 ஆண்​டு​களாக பேசிவரு​கிறேன். மீண்​டும் சொல்​கிறேன். இந்த விவ​காரத்தை தமிழக அரசு அரசியலாகவே பார்க்​கிறது.

இது தொடர்​பாக நான் நாடாளுமன்​றத்​தில் பேசி​யுள்​ளேன். தேசிய கல்விக் கொள்​கையை நாடே ஏற்​றுக் கொண்​டுள்​ளது. தமிழகத்தில் மதிய உணவு உட்பட பல்​வேறு நலத் திட்​டங்​களுக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் நிதி வழங்கி வரு​கிறது. நடப்பாண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்​டிய கல்வி சார்ந்த நிதியை மத்​திய அரசு வழங்​கி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *