• September 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சோஹோ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: பிரி​வினை​யின் போது தங்​கள் குடும்​பங்​கள் எல்​லா​வற்​றை​யும் விட்​டு​விட்டு இந்​தி​யா​வுக்கு எப்​படி வரநேர்ந்​தது என்​பது குறித்து சிந்தி நண்​பர்​களிடம் ஏராள​மான கதைகளை கேட்​டிருக்​கிறேன். இந்​தி​யா​வில் அவர்​கள் தங்​கள் வாழ்க்​கையை கட்​டி​யெழுப்பி சிறப்​புடன் உள்​ளனர்.

அதேபோன்​று, விசாவுக்​கான கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்ள நிலை​யில் அமெரிக்​கா​வில் உள்ள இந்​திய தொழில் வல்​லுநர்​கள் தங்​கள் தாய்​நாட்​டுக்கு திரும்​புவதை தீவிர​மாக பரிசீலிக்க வேண்​டும். பிரி​வினைக்​குப் பிறகு இந்​தி​யா​வில் செழித்து வளர்ந்​துள்ள சிந்தி சமூகத்​தினரைப் போல அவர்​களும் தங்​களது சொந்த நாட்​டில் வாழ்க்​கையை கட்​டி​யெழுப்ப ஒரு நல்ல வாய்ப்​பாக அமை​யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *