
சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்கத்துடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் தமிழ் மின் நூலகம் தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மின் நூலகத்தில் இதுவரை லட்சக்கணக்கான அரிய வகை நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் மின் பதிப்பாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகளின் ஒரு பகுதியாக நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் மின் நூலகத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.