
வடசென்னை மாதவரத்தில் அமைந்துள்ள மெரிடியன் மருத்து வமனையில் இதய அறிவியல் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மாதவரம் 200 அடி ரிங் ரோடு, ஜவஹர்லால் நேரு சாலையில் 'மெரிடியன் மருத்துவமனை' உள்ளது. இந்த மருத்துவமனையில் இதய அறிவியல் மையத்தை (மெரிடியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாக் சயின்ஸ்) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.