
மும்பை: நவராத்திரி விழா நாளை முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தி தொடர்பாளர் ராஜ் நாயர் கூறியதாவது:
கர்பா நடன நிகழ்ச்சி மட்டும் அல்ல. இது கடவுளை மகிழ்விக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி. முஸ்லிம்களுக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இந்து சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கர்பா நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். நடன நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பெயரை ஆதார் அட்டையில் சரிபார்த்து, அவர்கள் நெற்றியில் திலகமிட்டு பூஜைகள் செய்தபின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விஎச்பி அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.