
'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூடினார்.
சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 62ம் ஆண்டு விழா உயர்நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி வரவேற்றார். சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி தலைமை வகித்தார். செயலாளர் ஏ.பர்வீன் ஆண்டறிக்கை வாசித்தார்.