
மும்பை: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதை திட்டத்தில் மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள ஷில்பட்டா, நவி மும்பையில் உள்ள கன்சோலி இடையிலான 4.88 கி.மீ. நீள சுரங்கப்பாதை நேற்று தோண்டி முடிக்கப்பட்டது.
இதன்மூலம் இத்திட்டத்தில் ஒரு முக்கிய மைல் கல் எட்டப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இறுதி அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: