
பெங்களூரு: கர்நாடகாவில் ஆயில் குமார் என்பவர் தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலுக்கு தீங்கான ஆயிலை குடித்து வரும் இவர் இதுவரை மருத்துவமனைக்கே சென்றதில்லை என கூறுவது வியப்பின் உச்சிக்கு அழைத்து செல்கிறது.
அண்மையில் சமூக வலைதளங்களில் ஆயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்தர் ஒருவர் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இன்ஜின் ஆயிலை குடித்துக்கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட‌ லட்சக்கணக்கான பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.