
போபால்: மத்தியபிரதேசத்தில் பன்னா வைரச் சுரங்கம் மிகவும் பிரபலமானது. தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் இதுவாகும்.
இங்கு 8 மீட்டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு ரூ.200-க்கு ஏலம் விடப்படுகிறது. வைரம் தோண்டி எடுத்த பிறகு அதை பன்னா வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இங்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வைர ஏலம் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து வைர வியாபாரிகள் பங்கேற்கின்றனர். ஏலத்தொகையில் 11% ராயல்டி, 1% டிடிஎஸ் என மொத்தம் 12% கழிக்கப்பட்டு எஞ்சிய தொகை அதை கண்டெடுத்தவருக்கு தரப்படும்.