
தென்காசி: சுரண்டை அருகே குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பான விவகாரத்தில், அதிமுக எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிராமத்தைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள கள்ளம்புளி குளத்துக்கு கருப்பாநதி அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்தக் குளம் நிரம்பிய பின்னர், அருகில் உள்ள குலையனேரி குளத்துக்கு தண்ணீர் செல்வது வழக்கம். கள்ளம்புளி குளத்தை நம்பி 48 ஏக்கர் நஞ்சை, 500 ஏக்கர்புஞ்சை நிலங்கள் உள்ளன.