
சென்னை: தூத்துக்குடியில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில், கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க கொச்சின் ஷிப்யார்டு மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் தொழில்துறை வரலாறு காணாத வளர்ச்சிகண்டுள்ளது. பல தொழில்பிரிவுகள், குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ், வாகன உதிரிபாகங்கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.