
புதுடெல்லி: ஜெய்ஸ் -இ-முகமது கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி ஒப்புதலை தொடர்ந்து, முரித்கே பகுதியில் இருந்த ‘மர்காஷ்-இ-தொய்பா’ முகாம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தரைமட்டமானதாக லஷ்கர் கமாண்டர் குவாசிம் தற்போது கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று, லஷ்கர் பிரிவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.