
சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடவே, குடிநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.