• September 20, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் நடந்த தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசும்போது,
“ஜிஎஸ்டி (GST) கொண்டு வரப்படுவதற்கு முன்பு ஒரு பொருளுக்கு வரி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருந்தது. அதில் மறைமுக வரிகளும் அதிகமாக இருந்தன.
2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபோது 5%, 12%, 18%, 28% என்ற விகிதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பொருளுக்கான வரி வேறுபாட்டின் சராசரியை கணக்கிட்டு, அதன்படி 4 விகிதங்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு வரி நிர்ணயிக்கப்பட்டது

நிர்மலா சீதாராமன்

8 ஆண்டுகளாக அதிகமாக வரி வசூல் செய்து விட்டு, தற்போது குறைப்பது போல குறைக்கிறார்கள் என சிலர் குறை சொல்லுகிறார்கள். அதை நான் எதிர்க்கிறேன். ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயம் செய்வதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கும் பங்கு உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறைப்படுத்தவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.

2017-ல் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று நோய் தொடங்கியதால், வரியை குறைக்க நல்ல சமயம் பார்த்து காத்திருந்தோம். தற்போது சரியான சந்தர்ப்பம் வந்ததால் ஜிஎஸ்டி வரியில் சீரமைப்பு கொண்டு வந்துள்ளோம்.

அதிக ஜிஎஸ்டி வரியை அமல்படுத்திவிட்டு, தற்போது ஜிஎஸ்டி வரியை குறைப்பது போல நாடகமாடும் அவசியம் பிரதமர் மோடிக்கும், என்டிஏ அரசுக்கு இல்லை.

375 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு தற்போது 2 விதமான வரி விகிதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 12%, 28% சதவிகித வரி இனி இருக்காது. 90 சதவிகித பொருட்கள் 28% சதவிகிதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

2017-ல் 65 லட்சம் பேராக இருந்த ஜிஎஸ்டி பயன்பாட்டாளர்கள், இப்போது 1 கோடி 51 லட்சமாக மாறி உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறியதைப்போல, ஜிஎஸ்டி கொடூரமான வரிமுறையாக இருந்திருந்தால் 1 கோடி 51 லட்சம் பேர் ஜிஎஸ்டி பயன்பாட்டாளராக உயர்ந்திருக்க மாட்டார்கள்.

நிர்மலா சீதாராமன்

ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கிறது. இந்த வரி வரவில்லை எனில் திட்டங்களை நிறைவேற்ற முடியாது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் மக்கள் கைகளிலேயே இருக்கும். குறைந்த வரி மூலம் நிறைய பொருட்களை மக்கள் வாங்குவார்கள். இதனால் வேலை வாய்ப்பு ஏற்படும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உயரும், பொருளாதாரம் மேம்படும்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் பொருளாதாரச் சுழற்சி அதிகமாகி நாட்டின் பொருளாதாரம் உயரும். ஆனால், இப்போது ஒரே வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த இயலாது. சரியான வளர்ச்சி வீதம் தேவை.

ஒரே வரி விதிப்பால் பணக்காரனுக்கும் ஏழைக்கும் ஒரே விலையா என கேள்வி எழும். நடுத்தர மக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஐ. துறையினர் பயன்பெறும் வகையில் வரி சீர்திருத்தம் செய்ய பிரதமர் எட்டு மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினார். பிரதமரின் அறிவுரைகளை மனதில் வைத்துதான் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மோடி

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயத்திற்கான டிராக்டர் முதற்கொண்டு 5% சதவிகித வரிக்கு கொண்டு வந்தோம். ஜிஎஸ்டி மூலம் இந்தியாவில் 144 பாரத் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்தியா முழுவதும் 20 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 கோடி மக்களின் ஏழ்மை நீங்கியுள்ளது. 60% தேசிய நெடுஞ்சாலைகள் கிடைத்தன.

இந்திரா காந்தி காலத்தில் 90% வருமான வரி கட்டிய நிலையில், இன்று 12 லட்ச ரூபாய் வரை வருமான வரி உச்சவரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆண்டுகளில் தொழில்துறையில் மாற்றங்கள் வரும். அப்படி வரக்கூடிய மாற்றங்களுக்கு தொழில்துறையினர் தயாராக இருக்க வேண்டும்.

விரைவில் பொருளாதாரத்தில் முழுமையாக டிஜிட்டல் மயம் வர உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் இயற்கை முறையில் உணவுப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். உலகமயமாதலுக்கு ஏற்ற வகையில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்,” என்று அவர் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *