
திருப்பூர்: தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வஞ்சிபாளையம் முருகம்பாளையத்தில் ஹன்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எரிவாயுவை பிரித்தெடுத்து, சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார்.