• September 20, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல்: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்​றும், நாளை​யும் நாமக்​கல் மாவட்​டத்​தில் மேற்​கொள்​ள​விருந்த சுற்​றுப்​பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. நாமக்​கல் மாவட்​டத்​தில் 19, 20, 21-ம் தேதி​களில் பழனி​சாமி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​வார் எனவும், நேற்று ராசிபுரம், சேந்​தமங்​கலம் சட்​டப்​பேரவை தொகு​தி​கள், இன்று நாமக்​கல், பரமத்தி வேலூர், நாளை திருச்​செங்​கோடு, குமார​பாளை​யம் தொகு​தி​களில் மக்​களிடையே பேசு​வார் என்​றும் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், அவரது சுற்​றுப்​பயணம் நேற்று மாற்​றம் செய்​யப்​பட்​டது. அதன்படி, இன்​றும், நாளை​யும் நடை​பெற​விருந்த சுற்​றுப்​பயணம் அக். 4, 5-க்கு மாற்​றம் செய்​யப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் கன மழை பெய்ய உள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ள​தால், சுற்​றுப்​பயணம் தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறி​விக்கப்பட்டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *