
தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டூரடித்து விசாரணை நடத்தும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேவைப்பட்டால் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களையும் எழுதி வாங்கி வருகிறார். ஆனால், அவரது சொந்த ஊரான திருச்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதை கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் 50 வார்டுகளை தன்வசம் வைத்திருக்கிறது திமுக. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே இருப்பதால் இங்கு எதிர்க்கட்சி வரிசையிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வளவாய் வருவதில்லை. அதையும் சேர்த்து ஆளும் கட்சி கவுன்சிலர்களே செய்து கொண்டிருப்பதால் விளையாட்டு மைதானம் போல் ஆகிக் கொண்டிருக்கிறது மாநகராட்சி.